முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகில் திட்டமிட்டபடி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி ஆரம்பமாகியுள்ளது.
குறித்த பேரணி இன்று காலை 9 மணிக்கு முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் ஆரம்பமாகியுள்ளது.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும், சர்வதேச நிபுணர்களின், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் தங்களது உறவுகளை கையளித்து பேருந்துகளில் ஏற்றப்பட்ட இடத்திலிருந்து கவனயீப்புப் பேரணி ஆரம்பித்து, முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்பாகச் சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட முல்லைத்தீவு பிரதேச செயலகத்தை சென்றடையவுள்ளது.
அதனையடுத்து பிரதேச செயலகத்திற்கு முன்பாக மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணிக்கு பெரும் திரளான மக்கள் ஆதரவு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.