மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீன்ஸ் வீதி, கின்சி வீதி, தேசிய வைத்தியசாலை சதுக்கத்திற்கு அண்மித்த வீதிகள் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 11 பேர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு மாளிகாகந்த நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த உத்தரவு, இன்று காலை 10.30 மணி முதல் நாளை காலை 10.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
தேசிய வைத்தியசாலை தொடக்கம் லிப்டன் சுற்றுவட்டம் வரை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கு எதிர்ப்பாளர்கள் குழுவொன்று திட்டமிட்டுள்ளதாக மருதானை பொலிஸார் மாளிகாகந்த நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், போராட்டத்தை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதவானிடம் கோரிக்கை விடுத்தார்.
இதன்படி, பண்டாரநாயக்க கட்டிடம், விபத்துப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, கண் வைத்தியசாலை, வைத்தியசாலை சதுக்கம், சுகாதார அமைச்சு ஆகிய இடங்களுக்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், டீன்ஸ் வீதி மற்றும் கின்சி வீதியின் நடைபாதைகளை பயன்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.