பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் படுகாயமடைந்ததாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, குண்டுத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாக பாகிஸ்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்கொலை படை தாக்குதல் மூலம் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பாகிஸ்தான் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.