சாகச மனிதர் 68 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறப்பு

உயரமான கட்டடங்களில் ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டு சாகசப் பிரியர், 68 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

ரெமி லுசிடி என்னும் பெயருடைய 30 வயதான குறித்த நபர், சீனாவின் n கொங்ஹொங்கில் ஒரு அடுக்குமாடியில் ஏறியபோது தவறி விழுந்துள்ளார்.

தனது நண்பரை காண வந்ததாகக் கூறி அவர் அந்த அடுக்குமாடிக்குள் நுழைந்து கொண்டிருக்கும் போது, 68 ஆவது மாடியை அடைந்தபோது, கதவைத் தட்டி அங்கிருந்த பணிப் பெண்ணிடம் உதவி கோரியுள்ளார்.

ஆனால் அந்த பெண்ணோ அச்சத்தில் உதவ மறுத்து பொலிஸ் நிலையத்தைத் தொடர்புகொண்டார். அதற்குள் ரெமி லுசிடி கால் தவறி கீழே விழுந்து மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply