பொது இடங்களில் இசையை இசைப்பது உட்பட பல கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துள்ளதோடு, பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த இசைப் பாடசாலைகளையும் மூடுமாறு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், மேற்கு ஹெராத் மாகாணத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இசைக்கருவிகளை கைப்பற்றிய தாலிபான்கள், அவற்றை தீ வைத்து எரித்துள்ளனர்.
அதற்கு விளக்கமளித்த தலிபான்கள் இசையால் இளைஞர்கள் வழிதவறிச் செல்வதாக தெரிவித்தனர்.