தற்போதைய மருத்துவ கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இலங்கையில் புதிய மருத்துவ சட்டமொன்று உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்காக ஆறு மாத காலத்திற்குள் புதிய மருத்துவ சட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
புதிய மருத்துவச் சட்டத்தின் விதிகள் மூலம், சிறந்த சுகாதாரத்தை வழங்குவதையும் குடிமக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதையும் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவுமேலும் தெரிவித்துள்ளது.