வெல்லவாய – மொனராகலை வீதியின் மதுரகெட்டிய பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து ஒன்றும் கெப் வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உதயகுமார படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மொனராகலையிலிருந்து வெள்ளவாய நோக்கி பயணித்த பேருந்தும் வெல்லவாயவிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த கெப் வண்டியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.