மெக்சிகோவின் குரேடாரே மாகாணத்தின் எல்.மார்க்யூஸ் நகரில் உள்ள ஒரு ரயில்வே பாதையைப் பயணிகள் பேருந்து கடந்தபோது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, பேருந்து ரயிலில் சிக்குண்டு தண்டவாளத்தில் இழுத்து செல்லப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதோடு 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மெக்சிகோவில் ரயில் சமிஞ்ஞைகள் மற்றும் தடுப்பு பாதைகளில் குறைபாடுகள் இருப்பதால் இவ்வாறான விபத்துகள் அடிக்கடி இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மெக்சிகோ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.