இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வணிக பல்வேறு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிடுகின்றார்.
எனினும், அந்த முட்டைகளை பேக்கரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
லங்கா சதொச ஊடாக தினமும் ஒரு மில்லியன் முட்டைகள் விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அடுத்த வாரத்திற்குள் அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கும் பொதி செய்யப்பட்ட முட்டைகளை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.
பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொதி செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை 42 ரூபா எனவும் அவர் குறிப்பிட்டார்.