ஈரான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரை சந்தித்தார் அலி சப்ரி!

ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சருடனான சந்திப்பில் பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்புக்கள் , வர்த்தகம், சுற்றுலா, அறிவியல் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் உறவுகளை விரிவுபடுத்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

அத்தோடு இவ்விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான புதிய சாத்தியமான ஒப்பந்தங்கள் தொடர்பிலும் , ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தகளை செயல்படுத்தல் தொடர்பிலும் இரு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகளுடன் நட்பு மற்றும் ஆக்கபூர்வமான முறையில் ஒத்துழைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் போது கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் அலி சப்ரி , இலங்கையுடன் ஈரான் கொண்டுள்ள நட்புறவைப் பாராட்டியுள்ளார்.

அத்தோடு ஈரானிய தேயிலை சந்தையில் தனது நாட்டின் இருப்பை புதுப்பிக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply