பங்களாதேஷில் அதிகரித்த டெங்கு நோய்த் தாக்கம் – 303 பேர் பலி

மழைக் காலத்தில் நுளம்புகளால் அதிகளவு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகும் நாடாக பங்களாதேஷ் காணப்படுகின்றது.

பங்களாதேஷில் கடந்த ஜூன் மாதம் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவானதால்,  பங்காளதேஷ் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகின்றது.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பங்காளதேஷில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 303 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் பங்களாதேஷ் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை மாத்திரம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் பலர் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், நோயின் தாக்கம்  மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply