சிறு விவசாயிகளுக்கு ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் உர விநியோகம் – மஹிந்த அமரவீர

எதிர்வரும் சிறுபோகம் மற்றும் வறட்சியான காலங்களுக்கு இடையே இலங்கையிலுள்ள 2 லட்சத்து 28 ஆயிரம் சிறு விவசாயிகளுக்கு எதிர்வரும் பருவத்தில் இலவச உரங்கள் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட உரங்களின் இருப்புக்களை ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் விநியோகிக்க முன்னதாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும், விவசாயத்தில் ஏற்படவுள்ள காலநிலை மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்தாக  கலந்துரையாடல் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வறட்சியை எதிர்கொள்வதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்து விவசாயிகளுக்கு நேரடியாகக் கற்பிக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்ததோடு, வறட்சியான காலநிலை குறித்து உரிய தரப்பினர் விவசாயிகளுக்கு அறிவித்துள்ளாரா என்பதும், உரிய முறையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றியதா என்பதும் பிரச்சினைக்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய மற்றும் மேற்கொள்ள வேண்டிய அனைத்து அணுகுமுறைகளிலும் நுழைய அனைத்து வழிகளிலும் தலையிடுவேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் பெறப்பட்ட 8,360 மெற்றிக் தொன் உரத்தை எதிர்வரும் காலங்களில் விநியோகிப்பதற்காக விவசாய அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் நேற்று இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் உலர் மற்றும் இடைநிலை வலயங்களின் பல மாவட்டங்களில் உள்ள 228,000 சிறு விவசாயிகளுக்கு இந்த உர இருப்புக்கள் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளன.

உரக் கூட்டுத்தாபனம் ஹெக்டேருக்கு 25 கிலோ மற்றும் ஹெக்டேருக்கு 50 கிலோ விநியோகத்தை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது தெரிவித்தார்.

இதன்படி குருநாகல், வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு இந்த உரம் விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜப்பான் தூதரகத்தின் பிரதித் தலைவர் அமைச்சர் கட்சுகி கொட்டாரோ, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க மற்றும் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply