PT-6 விமானம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும்: தயாசிறி

PT-6 ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 விமானிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, 1958 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள் இன்னும் பயிற்சிக்காக பயன்படுத்தப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பயிற்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் PT-6 விமானங்கள் 1958 இல் தயாரிக்கப்பட்டதாகவும், இயந்திரங்கள் 1961 இல் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த பழைய விமானங்களை பயிற்சி நோக்கங்களுக்காக பயன்படுத்துவது நியாயமற்றது மற்றும் வருந்தத்தக்கது என்றும், அவற்றை பயிற்சி நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு பதிலாக அருங்காட்சியகங்களில் வைக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அரசாங்கம் கிபிர் போர் விமானங்களின் பழுதுபார்க்கும் பணிக்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. ஆனால் PT-6 விமானத்தின் விலை 0.75 அமெரிக்க டொலர்கள் மட்டுமே. இந்த நியாயமற்ற மற்றும் வருந்தத்தக்க சம்பவங்களுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply