மாண்புமிகு மலையகம் 200 நடை பயணம் – மட்டக்களப்பில் ஆதரவுப் பேரணி!

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சி நடை பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் ஆதரவுப் பேரணி இடம்பெற்றது.

வேர்களை மீட்டு உரிமை வென்றிட மாண்புமிகு மலையகம் எனும் தொனிப் பொருளில் தலைமன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனிக்கு வலுச் சேர்க்கும் முகமாக இன்று மட்டக்களப்பு வாதாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மிக எழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிவில் சமூக அமைப்புகளினால் குறித்த நடைபவனி இன்று காலை 7.30 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த பேரணி பகல் 12 மணி மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நிறைவடையவுள்ளது.

200 வருடங்களாக ஒரு ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வரும் மலையக மக்களது உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த நடை பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply