முல்லைத்தீவு அலம்பில் கடற்பரப்பில் மீன்பிடித்ததற்காக 10 இந்திய பிரஜைகளுடன் இந்திய இழுவை படகு ஒன்றும் நேற்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, நேற்று காலை முல்லைத்தீவு, அலம்பில் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதைக் கண்டறிந்த கிழக்கு கடற்படையினர், இந்திய மீன்பிடி இழுவை படகுகளை பிடிப்பதற்காக 4 ஆவது விரைவுத் தாக்குதல் புளோட்டிலாவின் விரைவுத் தாக்குதல் கப்பலை அனுப்பியது.
இழுவை படகு மற்றும் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், இலங்கை கடலோர காவற்படை ஊடாக திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்திற்கு சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட இழுவை படகு உட்பட, இலங்கை கடற்படையினர் 14 இந்திய இழுவை படகுகளை கைப்பற்றியுள்ளதோடு, 2023 ஆம் ஆண்டில் இதுவரை 93 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளனர், இவை அனைத்தும் சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.