லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்சுலின் இல்லை என வெளியான தகவல் பொய்யானது எனவும் சிறுவர்களுக்கு தேவையான இன்சுலின் போதியளவு உள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டபோதே அவர், இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் எங்கள் வைத்தியசாலையில் தேவையான அளவு இன்சுலின் உள்ளது எனவும் கிளினிக்குகளுக்கு வரும் சிறுவர்களுக்கும் வழங்ககூடிய அளவில் போதுமான இன்சுலின் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் உள்ள எந்த ஒரு வைத்தியசாலைக்கும் இன்சுலின் தேவை இருந்தால், அதை வழங்க கூடிய திறனும் தங்களிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, உங்கள் குழந்தைக்கு இன்சுலின் கொடுக்க விரும்பினால் எவ்வித தயக்கமும் இன்றி வைத்தியசாலைக்கு செல்லுங்கள் என அவர் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.