கொழும்பு முன்னாள் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மின் துண்டிப்பு!

கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 19ம் திகதி முதல் மின்கட்டணம் செலுத்தாததால், ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் மின்கட்டணம் மின்சார சபைக்கு செலுத்த வேண்டியுள்ளது.

அதற்கமைய, நேற்று காலை முதல் முன்னாள் மேயர் வீட்டின் மின் இணைப்புத்  துண்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்பட்ட நிலையில், கொழும்பு மேயர் அலுவலகமும் நீக்கப்பட்ட போதிலும், ரோசி சேனநாயக்க தொடர்ந்தும் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியுள்ளார்.

அதன் காரணமாக அந்த வீட்டின் மின் கட்டணத்தை அவர் தனிப்பட்ட முறையில் செலுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply