பிரதமர் தினேஷ் குணவர்தன நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனாவிற்கு சென்றுள்ளார்.
7வது சீனா-தெற்காசியா எக்ஸ்போ மற்றும் 27வது சீனா குன்மிங் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கண்காட்சி ஆகியவற்றில் அவர் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
பிரதமருடன் இராஜாங்க அமைச்சர்களான தாரக பாலசூரிய, ஜனக வக்கும்புர, கனக ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் சீனாவுக்கு சென்றுள்ளனர்.
நாளை 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை சீனாவின் குன்மிங்கில் எக்ஸ்போ நடைபெறவுள்ளது.
மேலும் பொது வளர்ச்சிக்கான ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு என்ற கருப்பொருளில் நடைபெறும் கண்காட்சியில் 60 நாடுகள் பங்கேற்க உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.