இலங்கை தேசிய தொலைக்காட்சி சேவைக்கு சொந்தமான சனல் ஐ தொலைக்காட்சியை தனியர் நிறுவனத்திற்கு வழங்கும் யோசனையை அமைச்சரவை நிராகரித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் இதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.
சேனல் ஐ தொலைக்காட்சியை தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வழங்க கடந்த ஜுன் மாதம் இரு தரப்பிற்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சேனல் ஐ தொலைக்காட்சியை குறித்த நிறுவனத்திற்கு வழங்கும் திட்டத்திற்காக பணிப்பாளர் சபை மற்றும் ஊடகத்துறை அமைச்சில் அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே, சேனல் ஐ தொலைக்காட்சியை குறித்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் யோசனையை அமைச்சரவை நிராகரித்துள்ளது.