முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் நாளைய தினம் பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில் புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர்மலைப் பகுதியில் ஒன்றிணைய வேண்டும் எனவும் இந்து பெளத்த மோதலை தடுக்கவும், தமிழ் அடிப்படைவாதிகளைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அழைப்பு விடுத்துள்ளார்.
எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்.
நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்பவர்களுக்கு மாத்திரம் தான் பிரச்சினை உள்ளது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி செயற்படுகிறார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் வடக்கு கிழக்கு மாகாணங்க ளில் சிறுபான்மை சமூகமாக வாழும் சிங்களவர்களின் இருப்பு கேள்விக்குள் ளாக்கப்படும்.
பௌத்த மரபுரிமைகள் முழுமையாக தமிழ்ப் பிரிவினைவாதிகளால் அழிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.