குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் அமைதியாக பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது ‘குருந்தி விகாரை’ பௌத்த பிக்கு நுழைந்து தமிழர்களின் பொங்கல் வழிபாட்டை சீர்குலைக்க முயன்றிருந்தார்.
இதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் நிகழ்வு சுமூகமாக இடம்பெற்று வந்த நிலையிலேயே பௌதத் பிக்கு நுழைந்து குழப்பம் ஏற்படுத்த முற்பட்டுள்ளார்.
பொங்கல் வழிபாட்டிற்கு சென்றிருந்த மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இருதரப்பினரையும் சமரசப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, தொல்பொருள் திணைக்களத்தின் கடுமையான விதிகளின்படி, குருந்தூர் மலையில் இன்று பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம், முல்லைத்தீவு குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஐநூறுக்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தனர்.
இன்றைய தினம் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் நிகழ்வு இடம்பெற்ற நிலையில், சிங்கள மக்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய பொங்கல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதன் அடிப்படையில், 3 பேருந்துகள், 2 இராணுவ ரக் வாகனங்களில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.