ஹோமாகம தீ விபத்து – விசாரணையில் அம்பலமான தகவல்!

ஹோமாகம  கட்டுவன பகுதியில் தீப்பற்றலுக்குள்ளான இரசாயன தொழிற்சாலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி வந்துள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரன உள்ளிட்ட தரப்பினர் தீப்பற்றலுக்குள்ளான தொழிற்சாலைக்கு சென்று கண்காணிப்புக்களை மேற்கொண்டனர்.

இந்த கண்காணிப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கிய குறித்த தொழிற்சாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்

நேற்றிரவு 8.30 அளவில் குறித்த தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டது.

இந்த தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக கோட்டை, தெஹிவளை  கல்கிசை மாநகர சபை மற்றும் ஹொரணை தீயணைப்பு பிரிவு என்பவற்றுக்கு உட்பட்ட 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply