யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் “நினைவு நல்லது” எனும் நூல் அறிமுக விழா இடம்பெறவுள்ளது.
ஒலி, ஒளி ஊடகர் பி.விக்னேஸ்வரனின் ஐம்பதாண்டுகளுக்கும் மேலான அனுபவப் பகிர்வுகளுடன் கூடிய “நினைவு நல்லது” எனும் நூல் எதிர்வரும் 29 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இதன் போது, வரவேற்புரை, தலைமையுரை, அறிமுகவுரை, வாழ்த்துரை, ஆய்வுரை, நயப்புரை, ஏற்புரை மற்றும் நன்றியுரை என்பன இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.