இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மாத்தளை எல்கடுவ பெருந்தோட்டத்தில் இருந்து மூன்று குடும்பங்களை அகற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அரசாங்கம் அதிகாரிகளுக்கா, மக்களுக்காக, சட்டம் எங்கே சட்டம் எங்கே? நாட்டுக்கு ஒரு நீதி மலையக மக்களுக்கு இன்னொரு நீதியா போன்ற பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வு இன்று மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், எதிர்வரும் 25ஆம் திகதி வரை கூடவுள்ளது.
கடந்த 11ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இன்று நாடாளுமன்ற அமர்வு கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
இன்று முதல் மூன்று நாட்களுக்கு 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் கீழ் கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அதனையடுத்து, 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.