நான் சிவாஜி கணேசனோ அஜித்தோ அல்ல – நாடாளுமன்றில் காட்டமாக கருத்துரைத்த மனோ!

யாரேனும் அடித்தால் நாமும் அடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

ரத்வத்த தோட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசுக்கு சொந்தமான ரத்வத்த தோட்டத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை ஒட்டுமொத்த உலகமும் பார்த்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இது மலையக மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கும் ஏற்பட்டுள்ள அவமானம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தோட்ட முகாமையாளரை உடனடியாக கைது செய்யுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றபோது அமைச்சர் ஒருவர் அங்கு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டதாகவும், தனக்கும் அங்கு சென்றிருக்க முடியும் எனத் தெரிவித்ததோடு, தான் சிவாஜி கணேசனோ, ரஜினிகாந்தோ அல்லது அஜித்தோ அல்ல எனவும் தான் சென்று பிழையான முன்னுதாரணமாகிவிடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

அனைவருடனும் ஐக்கியத்துடன் வாழ வேண்டும் என தான் விரும்புவதாகவும், தமக்கு யாரேனும் அடித்தால் தாமும் அடிக்க வேண்டும் என்பது உண்மைதான் எனத் தெரிவித்துள்ளார்.

காலி போராட்டத்தின் போது, வீடுகளுக்கு தீ வைத்தார்கள். இதன்போது நீங்களும் அவர்களுக்கு திருப்பி அடித்தீர்கள் தானே என நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.

இருப்பினும் தாம் யாரையும் திருப்பி அடிக்கவில்லை. இதனால்தான் இந்த சம்பவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

வெள்ளையர்களிடம் அடிமையாகி இருந்த நாம், இன்று தோட்ட முகாமையாளர்களிடம் அடிமைகளாக உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

தோட்டங்கள் ஒன்றும் அவர்களுக்கு உரித்தானது கிடையாது. அவர்களுக்கு குத்தகைக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம் என கூறியுள்ளார்.

கட்சி பேதங்கள் கடந்து, இந்த சம்பவத்திற்கு தீர்வொன்றை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply