ரத்வத்த தோட்ட விவகாரம் – அநீதிக்கு அரசாங்கமே பொறுப்பு; சஜித் விசனம்!

ஆளும் தரப்பினர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் தொழிலாளர்களின் வீடு சேதமாக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று குழப்பநிலை ஏற்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

மாத்தளை, எல்கடுவ, ரத்வத்த பகுதியில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் வசித்த தற்காலிக வீட்டை, தோட்ட உதவி முகாமையாளர் தனது அடாவடிக் கும்பலுடன் சேர்ந்துவந்து, அடித்து நொறுக்கியுள்ளார்.

இது அரச நிலத்தில் இடம்பெற்றுள்ள ஒரு அசம்பாவித சம்பவம் என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அநீதிக்கு அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அங்கு சென்று, நடிப்பது முக்கியமல்ல,  இந்த அரசாங்கம் மலைநாட்டு மக்களுடன் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை இந்த சம்பவத்தின் ஊடாக தெரிந்து கொள்ள முடிந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மக்களை அச்சுறுத்தி, அவர்களின் வீடுகளை அடித்து நொறுக்கிய அந்த அதிகாரி நாடாளுமன்றுக்கு பதில் கூற வேண்டும் என வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட மக்களின் வியர்வையால் தான் நாட்டுக்கு டொலர்கள் கிடைக்கிறன எனத் தெரிவித்துள்ளார்.

அவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக, ஆளும் தரப்பினர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் என விமர்சித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply