நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் – சபாநாயகரின் அதிரடி உத்தரவு!

இலங்கை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சபை அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, நாடாளுமன்றில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார மற்றும் நளின் பண்டார ஆகியோரை இன்றைய அமர்வுகளில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு இன்று மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல்  10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மு.ப 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள், ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply