பொலிஸ்தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று திருகோணமலை பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த நபர் திருகோணமலை- ஜமாலியா பகுதியில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நிலையில் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜமாலியா பகுதியைச் சேர்ந்த 26வயது இளைஞனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
இதேவேளை திருகோணமலை பொலிஸில் தடுப்பில் இருந்த போது உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு நீதிகோரி திருகோணமலை பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.