எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கர வண்டியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கட்டண அதிகரிப்பானது பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள மக்களை மேலும் அசௌகரியப்படுத்தும் என அச்சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
எனவே, அதனை கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணத்தை அதிகரிக்க போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.