எரிபொருள் விலைப் பட்டியலை வெளியிட்டது சினோபெக்!

சினோபெக் லங்கா நிறுவனம் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோகிக்கப்படும் எரிபொருள் விலையை இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

அதற்கமைய 92 ஒக்டேன் பெட்ரோல் 358 ரூபாயாகவும் 95 ஒக்டேன் பெட்ரோல் 414 ரூபாயாகவும் ஓட்டோ டீசல் 338 ரூபாயாகவும் சூப்பர் டீசல் 356 ரூபாயாகவும் மண்ணெண்ணெய் 231ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சினோபெக் லங்கா நேற்று மத்தேகொடவில் தனது முதலாவது உரிமையுடைய நிரப்பு நிலையத்தில் தனது செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.

மேலும் சந்தை ஊக்குவிப்பு பிரச்சாரமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை லீட்டருக்கு 3 ரூபாய் தள்ளுபடி என்ற அடிப்படையில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply