முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் போது, தொல்பொருள் துறை சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரின் மேற்பார்வையில் குறித்த அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றன.
குறித்த அகழ்வுப் பணி நேற்றைய தினம் இடம்பெறவிருந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் முல்லைத்தீவு நீதிபதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் குறித்த இடத்தைப் பார்வையிட்டு கலந்துரையாடியதையடுத்து, இருக்கின்ற வளங்களுடன் இன்று காலை 7.30 மணிக்கு அகழ்வு பணியை ஆரம்பிப்பதென தீர்மானித்திருந்தனர்.
அதற்கமைய இன்றைய தினம் காலை குறித்த அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.