உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் சுதந்திரமான விசாரணை சர்வதேச ஆதரவுடன் நடத்தப்பட வேண்டும் என அறிக்கை ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகம் வெளியிட்ட காணொளி நாடு முழுவதும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபக்சாக்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே இந்த தாக்குதலை நடத்தியதாக குறித்த காணொளியில் சாட்சியமாக காணப்படும் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை நடத்த யார்,யாரையெல்லாம் எப்படி பயன்படுத்தினார்கள், அதற்கு தானே நேரடி சாட்சியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதிர்வலைகளை ஏற்படுத்திய காணொளி வெளியான நிலையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளது.