தியாக தீபம் திலீபனின் நினைவூர்தி பேரணி – அக்கரைப்பற்றில் பதற்றம்!

ஐந்து அம்சக்கோரிக்கையை முன்வைத்து உண்ணா விரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பொத்துவில் முதல் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படும்

நினைவூர்தி பேரணிக்கு அக்கரைப்பற்று பகுதியில் எதிர்ப்பு வெளியிடப்பட்டமையை அடுத்து அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த வாகன பேரணி பொத்துவில் நகரில் நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டது. 

வாகன பேரணி செல்லும் வீதியின் இருமருங்கிலும் மக்கள் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்துக்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

 இந்தநிலையில், அக்கரைப்பற்று பகுதியில் பதாகைகளை ஏந்திய சிலர் வீதியை மறைத்து குறித்த வாகன பேரணிக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த குழுவினர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக விடுதலைப்புலிகள் அமைப்பினர் நடத்திய தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சர்வதேசத்தை வலியுறுத்துவதாக தெரிவித்து எதிர்ப்பில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனையடுத்து அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்தநிலையில் குறித்த வாகன பேரணி மாற்று வீதியூடாக அங்கிருந்து சென்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பொத்துவில் முதல் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படும் வாகன பேரணி இன்றைய தினம் களுவாஞ்சிக்குடியில் இருந்து வாகரை ஊடாக திருகோணமலையை சென்றடையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply