சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் நடவடிக்கை மீண்டும் திணைக்களத்திடம்!

சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மீண்டும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட இணையத்தள முறைமை ஊடாக சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை மீண்டும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் குறித்த நடவடிக்கையினை இராணுவம் மேற்கொண்டது.

வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து வழங்கும் நடவடிக்கையினை தனியார் நிறுவனத்திடம் வழங்கியதன் காரணமாக பெருந்தொகை நிதி செலுத்தப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி, 10 இலட்சத்து 22 ஆயிரத்து 763 சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் 24 இலட்சத்து 34 ஆயிரத்து 467 தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களும் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply