தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஏழு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, களுத்துறை, கண்டி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு நாளை காலை 6.00 மணி வரை 2 ஆம் நிலை (ஆம்பர்) எச்சரிக்கை ஆலோசனை அமுலில் உள்ளது.
களுத்துறை மாவட்டம் – இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவு
கண்டி மாவட்டம் – பஸ்பகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவு
மாத்தறை மாவட்டம் – கொட்டபொல மற்றும் பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுகள்
இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவு
இதற்கிடையில், கீழ்வரும் சில பிரதேசங்களுக்கும் நிலை 1 (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டம் – நெலுவ மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகள்
ஹம்பாந்தோட்டை மாவட்டம் – வலஸ்முல்ல பிரதேச செயலாளர் பிரிவு
களுத்துறை மாவட்டம் – அகலவத்தை மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள்
கேகாலை மாவட்டம் – ருவன்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவு
மாத்தறை மாவட்டம் – முலட்டியான மற்றும் அதுரலிய பிரதேச செயலாளர் பிரிவுகள்
இரத்தினபுரி மாவட்டம் – கலவான, கொலொன்ன, எஹலியகொட, குருவிட்ட, கிரியெல்ல, அயகம, எலபாத, நிவிதிகல மற்றும் பெல்மடுல்ல பிரதேச செயலாளர் பிரிவுகள்.
நிலச்சரிவுகள், பாறைகள் விழுதல், மற்றும் வெட்டும் சரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு மேற்கூறிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.