வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில், நேற்று அதிகாலை இலங்கை சுங்க அதிகாரிகளால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சிகரெட்டுகள் சுமார் 12.6 மில்லியன் பெறுதியானவை என இலங்கை சுங்கப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும், Fly Dubai விமானத்தில் இன்று அதிகாலை 1:10 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.