கொழும்பின் சில பகுதிகளில் நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை மாலை 5 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அம்பத்தலே நீர் வழங்கல் அமைப்பு மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்பு திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகளே நீர் வெட்டுக்கு காரணம் என நீர்வள சபை தெரிவித்துள்ளது.