அமைச்சர் நசீர் அஹமட்டை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லுபடியாகும் எனவும் சட்டபூர்வமானது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தனது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானத்தை எதிர்த்து சுற்றாடல் அமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் இன்று காலை தனது தீர்மானத்தை வழங்கியதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முடிவை உறுதி செய்தது.