2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் நாட்டின் பொருளாதார நிலைமை கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதால் அது வரவு செலவு திட்டத்தில் பிரதிபலிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடு விரைவில் கைச்சாத்திடப்படும் என்றும் இதன் மூலம் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதுடன், பொருட்களின் விலைகளும் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மேலும் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய காலம் தற்போது இல்லாமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.