ஹமாஸை அழிக்கத் துடிக்கும் இஸ்ரேலும் – பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப் போராடும் இந்தியாவும்!

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் உச்சம் அடைந்து உள்ளது. காசாவில் இருக்கும் ஹமாஸ் படையை மொத்தமாக ஒழிக்கும் வரை இந்த போர் முடிவிற்கு வராது என்று இஸ்ரேல் அறிவித்து உள்ளது.

மிக நீண்ட மோசமான போரை நடத்த போகிறோம் என்று இஸ்ரேல் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவும் பாலஸ்தீனத்துடன் வரலாற்று ரீதியாக நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. தனி பாலஸ்தீன நாட்டின் கொள்கைக்கு நீண்ட காலம் குரல் கொடுத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

1974 ஆம் ஆண்டில், பாலஸ்தீனித்தை தனி நாடாக அங்கிகரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்த முதல் அரபு அல்லாத நாடு இந்தியாவாகும்.

அந்த வகையில், இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்தியதும் அதை இந்தியா கண்டனம் செய்தது. அதன்படி இது போன்ற தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இஸ்ரேலுக்கு முழு ஆதரவை இந்தியா கொடுக்கும் என்று பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஆனால் அதன்பின் இஸ்ரேல் காஸாவில் நடத்திய கடுமையான தாக்குதலை பார்த்து இந்தியா புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்தியா இதில் தனி பாலஸ்தீன நாடு என்று கோரிக்கையை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது தொடர்பாக, பாதுகாப்பான, சுதந்திரமான தனி பாலஸ்தீன நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு என்று இந்திய வெளியுறவுத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில், இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறாது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பாதுகாப்பு, அமைதி ஏற்பட வேண்டும். இரண்டு நாடுகளும் சுதந்திரமாக வாழ்வதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமாக எங்களின் கொள்கை நீண்டகாலமாக மாறாமல் நிலையாக உள்ளது. பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் பாலஸ்தீனம் என்ற தனி நாடு இயங்க வேண்டும். பாலஸ்தீனத்தின் இறையாண்மை, சுதந்திரம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். பாலஸ்தீனம், இஸ்ரேல் இரண்டு நாடுகளும் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள், சுதந்திரமாக அமைதியாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

முதலில் ஹமாஸ் அமைப்பை இந்தியா எதிர்த்தது. ஆனால் அதே சமயம் இஸ்ரேல் காஸாவில் நடத்தும் தாக்குதலையும் எதிர்த்து உள்ளது. இதன் மூலம் நாங்கள் ஹமாஸுக்கு எதிரி ஆனால் தனி பாலஸ்தீனம் அமைவதற்கு எதிரி இல்லை. இதில் அமைதியான உடன்படிக்கை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என்று நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது இந்தியா.

இந்த விவகாரத்தில் மத்திய கிழக்கு நாடுகள் தலையிட்டு உள்ளன. மொத்தம் 8 நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டுள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஈராக், எகிப்து, சிரியா, அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டு உள்ளன.

லெபனான், ஈராக், எகிப்து, சிரியா பாலஸ்தீனம் பக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்றவை நேரடியாக இஸ்ரேலை ஆதரித்து வருகின்றன. இதில் ரஷ்யா, சீனாவும் தலையிட்டு உள்ளது.

இரண்டு நாடுகளுமே பாலஸ்தீனம் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் இதில் பாலஸ்தீனத்தை நேரடியாக ஆதரிக்கும் நிலையில்.. இந்தியா இஸ்ரேலை கண்மூடித்தனமாக ஆதரிக்க முடியாது என்பதால் இந்தியா நடுநிலையான முடிவை எடுத்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply