ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராக அலிஸாஹிர் மௌலானா நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஹாபீஸ் நசீர் அஹ்மட் வகித்த பதவி உயர்நீதிமன்றத்தால் வறிதாக்கப்பட்ட நிலையில் இவர் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.