சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் மரியா பெர்னாண்டா கார்ஸா(Maria Fernanda Garza) ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.
சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
இந்த விஜயத்தின் போது அவர் நாட்டின் அரச மற்றும் தனியார் துறைகளின் பல உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தக சம்மேளனம் தற்போது உலகளாவிய ரீதியில் 170 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 45 மில்லியன் வர்த்தக உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
இதற்கமைய மரியா பெர்னாண்டா கார்ஸாவின் இலங்கைக்கான விஜயம், பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறையின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஷனில் அன்டனி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.