நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் , மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை , மேல், மத்திய, கிழக்கு, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்று வேகமாக வீசக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, மழையுடனான வானிலை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே குறித்த ஆற்றை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.