காசா பகுதியில் நிலவும் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது
இதன் காரணமாக இலங்கையிலும் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு எரிவாயு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 500 ரூபாவால் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.
இறுதியாக கடந்த 5ஆம் திகதி எரிவாயு விலை திருத்தப்பட்டது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 343 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு தற்போது 3 ஆயிரத்து 470 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.