கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி ஒரங்களில் நிற்கும் ஆபத்தான மரங்களை அகற்றும் நடவக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதான வீதியில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரம் ஆகற்றப்பட்டது.
கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவராஜ்ஜின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த வீதி ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பிரதான மின் விநியோகம், பிரதேசத்துக்கான மின் விநியோகம் இடம்பெறுவதுடன், அதிக மக்கள் பயன்பாட்டு வீதியாகவும் அமைந்துள்ளது.
அரசாங்க மரக் கூட்டுத்தாபன கிளிநொச்சி உதவி பிரதேச முகாமையாளர், ஊழியர்கள், மின்சார சபை ஊழியர்கள், இடர்முகாமைத்துவப் பிரிவினர், கரைச்சி பிரதேச சபையினரும் முன்னிலையாகியிருந்த நிலையில் குறித்த மரம் அகற்றப்பட்டது.
கிளிநொச்சி நகரில் மேலும் 29 ஆபத்தான மரங்கள் மற்றும் கிளைகள் அகற்றுவதற்காக அடையாளப்படுத்தப்பட்டு அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தினர் தெரிவித்துள்ளனர்.