ஆசிரியர் – அதிபர் போராட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கல்வி அமைச்சு கவலை தெரிவித்துள்ளது!

கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி பெலவத்தையில் இடம்பெற்ற ஆசிரியர், அதிபர் ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸாரால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கவலை தெரிவித்த அமைச்சு, முரண்பாடுகள் மற்றும் நாட்டின் கல்வி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டதன் காரணமாகவே போராட்டக்காரர்கள் இத்தகைய நிலைக்கு உட்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு அமைச்சு வருத்தம் தெரிவித்ததுடன், கல்வி அமைச்சர் மாநாடு ஒன்றிற்காக இலங்கையில் இருந்து வெளியூர் சென்றிருந்த நேரத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றமை துரதிஷ்டவசமானது எனவும் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply