இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் கோபால் பாக்லே ஆகியோர் வரவேற்றனர்.
இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்ததன் 200 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் அவர் உரையாற்றவுள்ளார்.
வர்த்தகம் மற்றும் கைத்தொழில் தொடர்பான இணைப்பை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளில் இந்திய இலங்கை வர்த்தக உச்சி மாநாட்டில் முக்கிய உரை ஆற்றவுள்ளார்.
அத்தோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடவுள்ளார்.
இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களின் சூரிய மின்மயமாக்கலுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பரிமாற்றத்தையும் அவர் பார்வையிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தில் இரண்டு பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளையும் அவர் திறந்து வைக்கவுள்ளார்.
மேலும் இந்த விஜயத்தின் போது கண்டியில் உள்ள புனித பல்லக்கு ஆலயம், அனுராதபுரத்தில் உள்ள ஜெயஸ்ரீ மஹா போதி, திருகோணேஸ்வரம் மற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயங்களுக்கும் செல்ல உள்ளார்.
அத்தோடு லங்கா ஐஓசி எண்ணெய் குதங்கள், யாழ்ப்பாணம் கலாச்சார மையம் மற்றும் யாழ்ப்பாண பொது நூலகம் ஆகியவற்றையும் பார்வையிட உள்ளார்.