13 வருடங்களுக்கு முன் நடந்த கொலை வழக்கிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை!

கடந்த 2010 ஆம் ஆண்டு ஒருவரைக் கொன்ற வழக்கில் இருவருக்கு மத்திய மாகாண சிவில் மேல்முறையீட்டு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கண்டி குருபெத்த பிரதேசத்தைச் சேர்ந்த சமன் குமார திஸாநாயக்க மற்றும் சமரகோன் பண்டார விஜேகோன் ஆகிய இருவரும் கண்டி மேல் நீதிமன்றில் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டனர்.

தீர்ப்பை அறிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி கலாநிதி சுமுது பிரேமச்சந்திர, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க அரசு தரப்பால் முடிந்துள்ளதாக தெரிவித்தார்.

கந்தே ஹந்திய பிரதேசத்தில் சாமி ஐயா தன பாலசிங்கம் என்ற நபரை தலை மற்றும் வயிற்றில் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபர் 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கண்டி மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சாட்சிகளின் எண்ணிக்கை 14 எனவும் அவர்களில் 7 பேர் நேரில் கண்ட சாட்சிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply