கடுகண்ணாவ வைத்தியசாலையின் சுவர் உடைந்து வீழுந்ததில் வைத்தியாலையின் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய வைத்தியாசாலை பணியாளர் என தெரியவந்துள்ளது.
இவர் மண் மேடு ஒன்றை வெட்டச்சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.