கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் மூன்றாவது மாடியில் உள்ள ஆய்வுகூடத்தில் இயங்காத குளிரூட்டிகள் காரணமாக பல நோயாளிகளை கொழும்பு தேசிய வைத்தியசாலை நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குளிரூட்டும் அமைப்பில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
இதனால், பழுதடைந்த குளிரூட்டும் அமைப்பை மீட்டெடுக்க, பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சீன நிறுவனம் மேலும் இரண்டு நாட்களைக் கோரியுள்ளது என வைத்தியர் பெல்லானா மேலும் கூறினார்.